by Bella Dalima 01-07-2020 | 4:30 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,049 ஆக அதிகரித்துள்ளது.
பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய இருவர் இன்று தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 37 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் பிரகாரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1748 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.