நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழப்பு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழப்பு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 4:12 pm

Colombo (News 1st) தமிழ் நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள NLC அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்துத் தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இயங்காத கொதிகலனே வெடித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அணு உலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த அனல் மின் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் விபத்து ஏற்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இந்த அனல் மின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்