திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 3:30 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர் ககன என்பவரின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபர் கண்டி – அரவ்வல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 போலி முத்திரைகள் மற்றும் 5 போலி காணி உறுதிப்பத்திரங்கள் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ககனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தமக்கு தகவல் கிடைத்திருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மருந்தகத்தில் பணம் பறிமுதல் செய்த மூன்று சந்தேகநபர்கள் கைக்குண்டுடன் நீர்கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31, 32 , 42 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு மற்றும் கதிரான பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருந்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பின் மூலம் 25,000 ரூபா கப்பம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது வௌிநாட்டு கைக்குண்டு என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்