குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கூரிய ஆயுதங்களுடன் தெஹிவளையில் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கூரிய ஆயுதங்களுடன் தெஹிவளையில் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கூரிய ஆயுதங்களுடன் தெஹிவளையில் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 3:37 pm

Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கூரிய ஆயுதங்களுடன் தெஹிவளை மீனவர் குடியிருப்பு பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு வகையிலான வாள்களும் 6 கத்திகளும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்கிசை – வடரப்பல வீதியில் மூன்று கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்