கருணா அம்மானை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற வேண்டும்: ஓமல்பே சோபித்த தேரர் வலியுறுத்தல்

கருணா அம்மானை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற வேண்டும்: ஓமல்பே சோபித்த தேரர் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 8:09 pm

Colombo (News 1st) கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் கொழும்பில் இன்று மீண்டும் வலியுறுத்தினார்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

கருணா அம்மான் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் முறைப்பாடு முன்வைத்ததாக சோபித்த தேரர் குறிப்பிட்டார்.

தேர்தலின் போது வேட்பாளர்களைப் பயமுறுத்தாது, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்காது வேட்பாளர் ஒருவர் செயற்பட வேண்டும். ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை கருணா அம்மான் கொலை செய்தேன் என அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத கருத்தொன்றைக் கூறியுள்ளார். அத்துடன், வாக்காளர்கள் மீது அழுத்தத்தை பிரயோகிக்கின்றார். அதனால் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தேர்தலில் போட்டியிடும் உரிமை கருணா அம்மானுக்கு இல்லை

என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்