இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 8:16 pm

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளரை அந்தப் பொறுப்பிலிருந்து நிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் கட்சியின் வேட்பாளர்களைப் பாதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி ஶ்ரீகாந்தரூபன் உள்ளிட்ட நால்வர் கட்சி உறுப்பினர்களைக் களங்கப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்