by Bella Dalima 01-07-2020 | 3:47 PM
Colombo (News 1st) 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்க இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.
இன்று காலை 10 மணியளவில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜரான அவர் இரண்டு மணித்தியால விசாரணையின் பின்னர் அங்கிருந்து வௌியேறியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவரான அரவிந்த டி சில்வா நேற்று (30) விசேட விசாரணைப் பிரிவிற்கு சமுகமளித்திருந்தார்.
அவரிடம் 6 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது