தினேஷ் குணவர்தன - மைக் பொம்பியோ இடையே பேச்சு

வௌிவிவகார அமைச்சர் - அமெரிக்க இராஜாங்க செயலாளர் இடையே கலந்துரையாடல்

by Staff Writer 30-06-2020 | 2:01 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோருக்கு இடையில் தொலைபேசியூடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (29) மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது இரு தரப்பினதும் அபிலாஷைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுவாசக் கருவிகளை இலங்கைக்கு வழங்குதல், இலங்கையிலிருந்து பிபிஈ எனும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவுக்கு வழங்குவது உள்ளிட்ட 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை தவிர, பாதுகாப்பு குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. MCC மீளாய்வு அறிக்கை மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன, மைக் பொம்பியோவை தெளிவுபடுத்தியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.