திருகோணமலையில் 60 வயதான நபர் கத்தியால் குத்தி கொலை

திருகோணமலையில் 60 வயதான நபர் கத்தியால் குத்தி கொலை

by Bella Dalima 30-06-2020 | 3:54 PM
Colombo (News 1st) திருகோணமலை - கல்லடி, மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தளம் - காரியப்பர் வீதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த நபர் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குள் புகுந்துள்ளதுடன், கொலை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் அந்நபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உடப்பு - தானஞ்சோலை, 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.