சீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல் 

பன்றிக்காய்ச்சலுக்கு சமமான அறிகுறிகளுடன் பரவும் புதிய வகை காய்ச்சல் 

by Chandrasekaram Chandravadani 30-06-2020 | 10:47 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட சீனாவில் தொற்று நோயாகப் பரவக்கூடிய புதிய வகை காய்ச்சலொன்று தொடர்பான தகவல் பதிவாகியுள்ளது. பன்றிகளின் ஊடாக பரவும் இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்கும் தொற்றக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு சீனாவில் அடையாளம் காணப்பட்ட பன்றிக்காய்ச்சலுக்கு சமமான அறிகுறிகள் தென்படுகின்ற போதிலும், புதிய மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய வைரஸுக்கு G4 EA H1N1 என பெயரிடப்பட்டுள்ளது. நபரொருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், அவ்வாறு பரவும் பட்சத்தில் உலகளாவிய ரீதியில் இந்த தொற்று பரவக்கூடும் என நிபுணர்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.