இந்தியாவில் Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பு

இந்தியாவில் Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பு

இந்தியாவில் Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Jun, 2020 | 8:26 am

Colombo (News 1st) இந்தியாவில்Tik Tok, WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் Tik Tok உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே இடம்பெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பொருளாதார ரீதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மத்திய அரசினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயநர்களின் அந்தரங்க தகவல்கள், விதிகளுக்கு மாறாக செயற்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், குறித்த செயலிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், 59 செயலிகளுக்கான தடையை பிறப்பித்து இந்திய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் தொடர்புடைய செயலிகள், இந்திய இறையாண்மை மற்றும் இந்திய குடிமக்களின் அந்தரங்க தகவல்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக இந்திய சட்டமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (30) மாலை 4 மணிக்கு மன்கி பாத் நிகழ்ச்சியூடாக மக்களிடையே உரையாற்றவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்