அலுவலக நேரத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை

அலுவலக நேரத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை

அலுவலக நேரத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2020 | 7:41 am

Colombo (News 1st) அலுவலக நேரங்கள் ஆரம்பிப்பதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு யோசனை முன்வைத்துள்ளது.

இதன்படி, அரச நிறுவனங்களின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரையும், தனியார் துறையினரின் அலுவலக நேரம் காலை 9.45 முதல் மாலை 6.45 வரையும் அமையும் வண்ணம் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை அடங்கிய அறிக்கை இன்று (30) போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை பொது நிர்வாக அமைச்சிடமும் அமைச்சரவையிலும் சமர்ப்பித்ததன் பின்னர்,  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்