மஹாராஷ்ட்ராவில் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு

கொரோனா தாக்கம்: மஹாராஷ்ட்ராவில் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு

by Staff Writer 29-06-2020 | 7:01 PM
Colombo (News 1st) இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருவதனால், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், மும்பையில் அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ், பாரிய கொள்வனவுகளில் ஈடுபடவும் வௌியிடங்களில் உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், தனிப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வதற்காகவும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் வௌியிடங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கும் பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.