பாகிஸ்தான் பங்கு பரிவர்த்தனை நிலையம் மீது தாக்குதல்; இருவர் பலி

பாகிஸ்தான் பங்கு பரிவர்த்தனை நிலையம் மீது தாக்குதல்; இருவர் பலி

பாகிஸ்தான் பங்கு பரிவர்த்தனை நிலையம் மீது தாக்குதல்; இருவர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Jun, 2020 | 4:18 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் – கராச்சியிலுள்ள பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று (29) காலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸாரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஆயுததாரிகள் கிரனேட்டுக்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பங்கு பரிவர்த்தனை நிலையம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ளது என்பதுடன், அங்கு வீடுகளும் தனியார் வங்கிகள் பலவற்றின் தலைமையகங்களும் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் பாதுகாப்புப் படைவீரருக்கும் காயமேற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்