பதில் பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜராக போவதில்லை – சட்ட மா அதிபர்  

பதில் பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜராக போவதில்லை – சட்ட மா அதிபர்  

பதில் பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜராக போவதில்லை – சட்ட மா அதிபர்  

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2020 | 2:39 pm

Colombo (News 1st) பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்த மனுவில் தாம் பதில் பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜராக போவதில்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பின்பற்றாததன் காரணமாகவே சட்ட மா அதிபர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் சந்தேகநபராக தாம் பெயரிடப்பட்டுள்ளதை ஆட்சேபித்து மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் சார்பில் தாம் ஆஜராக போவதில்லை என சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மா அதிபரால் வழங்கப்படும் ஆலோசனைகளை பதில் பொலிஸ் மா அதிபர் பின்பற்ற தவறியுள்ளதால், அவர் சார்பில் மன்றில் ஆஜராகுவதில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது கூறியுள்ளார்.

எழுத்தாணை மனு தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்துறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி A.H.M.D.நவாஸ் மற்றும் நீதிபதி ரோஹித்த ராஜகருணா ஆகியோர் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்