வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி இன்றுடன் நிறைவு

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி இன்றுடன் நிறைவு

by Staff Writer 28-06-2020 | 7:59 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்றுடன் (28) நிறைவடைவதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் இன்று அச்சிடப்பட்டு, விரைவில் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடியே 77 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வாக்குச்சீட்டுகள் நீள அகலத்தினால் வேறுபட்டுள்ளதாகவும் அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார்.