இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம் 

இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம் 

by Staff Writer 28-06-2020 | 12:03 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊரடங்கு சட்டம் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது.