பரிசோதனைகளுக்கு 30பில்லியன் டொலர் நிதி தேவைப்படும்

கொரோனா பரிசோதனைகளுக்கு 30 பில்லியன் டொலர் நிதி தேவைப்படும்: உலக சுகாதார ஸ்தாபனம்

by Bella Dalima 27-06-2020 | 5:01 PM
Colombo (News 1st) கொரோனா பரிசோதனைகளுக்காக 30 பில்லியன் டொலருக்கும் அதிகத் தொகை நிதி தேவைப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. COVID-19 தொற்று பரிசோதனைகள் , சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கான நிதித் தேவை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தொகையினூடாக 500 மில்லியன் கொரோனா பரிசோதனைகள், 245 மில்லியன் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அடுத்த வருட நடுப்பகுதியாகும் போது, குறை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதித்தேவை ஏற்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.