கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9.9M-ஐ அண்மித்தது

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9.9 மில்லியனை அண்மித்தது

by Bella Dalima 27-06-2020 | 5:12 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9.9 மில்லியனை அண்மித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை அண்மித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், 53,50,000 பேர் வரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுமார் 40,51,000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் இலேசான கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 40 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 57,638 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான 46,831 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 25,52 ,446 ஆக அதிகரித்துள்ள நிலையில், 1,27,619 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேஸிலிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 46,907 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 12 ,80,054 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 18,276 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்னர். அங்கு இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சுமார் 15,689 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.