முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை

by Bella Dalima 26-06-2020 | 8:00 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் முன்னெச்சரிக்கையொன்றை விடுத்தார்.
நமக்கு தேவையானவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக நாட்டை சரி செய்ய முடியாது. நாடு தொடர்பில் ஆராய்ந்து, மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்கு நாம் ஆலோசனைகளை வழங்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அருகில் சிலர் உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அவருக்கு அருகில் உள்ள சிலர், நான் அனைவரையும் கூறவில்லை, கவர்ந்திழுக்கும் சிலர் அவரை சூழவுள்ளனர். இதனால் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக செயற்பட்டால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நாட்டிற்கு சிறந்த விடயங்களை செய்ய முடியும். அனைத்து ஜனாதிபதிகளுக்கும் , அரச தலைவர்களுக்கும் என்ன நடந்தது? தமது நெருங்கிய, அருகில் இருந்த நண்பர்களின் கதைகளைக் கேட்டு செயற்பட்டமையால் அனைத்தும் தவறாகவே அமைந்தது
என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.