by Staff Writer 26-06-2020 | 4:58 PM
Colombo (News 1st) களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் S.A.D. நிலந்த உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, குறிப்பிட்ட இன மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன், களுத்துறை வர்ணன் பெர்னாண்டோ மைதானத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றுமொரு தரப்பினருடன் இணைந்து மூடியிருந்த மைதானத்தின் நுழைவாயில் பூட்டை உடைத்து பலவந்தமாக நுழைய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.