கருணா மீது வழக்குத் தொடுக்குமாறு சரத் பொன்சேகா வலியுறுத்தல்

கருணா மீது வழக்குத் தொடுக்குமாறு சரத் பொன்சேகா வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2020 | 8:24 pm

Colombo (News 1st) கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த கருத்து பொதுத்தேர்தல் அரசியல் அரங்கின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், கருணா மீது விசாரணையின்றி உடனடியாக வழக்குத் தொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எனினும், கருணா கூறும் வகையில் 3000 பேரைக் கொன்றிருக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் 1200 பேர் மாத்திரமே உயிரிழந்ததாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இராணுவத்தினரைக் கொன்றதாக அவரே ஏற்றுக்கொண்டுள்ளதால், விசாரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அரை மணித்தியாலத்தில் தீர்மானத்தை எடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்குமாறும் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்