இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பரப்புரை நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பரப்புரை நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2020 | 6:53 pm

Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பரப்புரை நடவடிக்கை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இன்று காலை மலர் மாலை அணிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்​கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்