அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பொலிஸ் சீர்திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பொலிஸ் சீர்திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பொலிஸ் சீர்திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2020 | 4:50 pm

Colombo (News 1st) அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பொலிஸ் சீர்திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள பிரதிநிதிகள் சபையில் 236-க்கு 181 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டவாக்கத்திற்கு ஜோர்ஜ் ஃப்ளொய்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் தடுப்பில் இருக்கும் போது, ஆபிரிக்க வம்சாவளி அமெரிக்கப் பிரஜை ஜோர்ஜ் ஃப்ளொய்ட் கொலை செய்யப்பட்டதையடுத்து, உலகளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்றதுடன், அமெரிக்கப் பொலிஸில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்