வௌி மாநிலங்களிலிருந்து வருவோரை சுய தனிமைப்படுத்துமாறு நியூயோர்க் ஆளுநர் கோரிக்கை

வௌி மாநிலங்களிலிருந்து வருவோரை சுய தனிமைப்படுத்துமாறு நியூயோர்க் ஆளுநர் கோரிக்கை

வௌி மாநிலங்களிலிருந்து வருவோரை சுய தனிமைப்படுத்துமாறு நியூயோர்க் ஆளுநர் கோரிக்கை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Jun, 2020 | 9:54 am

Colombo (News 1st) COVID – 19 அதிகம் பரவும் மாநிலங்களில் இருந்து வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு நியூயோர்க், நியூ ஜேர்சி மற்றும் Connecticut மாநில ஆளுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் மற்றும் மேற்கு பிராந்திய மாநிலங்களில் தீவிரமாக கொரோனா தொற்று பரவுவதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் 180,000 பேர் வரையில் உயிரிழக்கலாம் என வொஷிங்டன் பல்கலைக்கழகம் எதிர்வுகூறியுள்ளது.

இதில் 95 வீதமானவர்களேனும் முகக்கவசம் அணிந்தால் உயிரிழப்பு 146,000 ஆக குறைவடையக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 2.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 121,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்