பெட்ரோல், டீசலுக்கான கூடுதல் கட்டணம் நீக்கம்

பெட்ரோல், டீசலுக்கான கூடுதல் கட்டணம் நீக்கம்

பெட்ரோல், டீசலுக்கான கூடுதல் கட்டணம் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2020 | 11:34 am

Colombo (News 1st) பெட்ரோல் மற்றும் டீசலுக்காக விதிக்கப்பட்ட ஒரு லீற்றருக்கான 26 ரூபா கூடுதல் கட்டணத்தை நீக்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூடுதல் கட்டணத்தை நீக்குவதன் மூலம் ஒரு லீற்றர் பெட்ரோலுக்காக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 35 ரூபா நட்டம் ஏற்படவுள்ளது.

அத்துடன், ஒரு லீற்றர் டீசலுக்காக 25 ரூபா நட்டம் ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எரிபொருளின் விலை எக்காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்