தன்ஸானியாவில் ஒரே இரவில் செல்வந்தரான சுரங்க அகழ்வாளர்

தன்ஸானியாவில் ஒரே இரவில் செல்வந்தரான சுரங்க அகழ்வாளர்

தன்ஸானியாவில் ஒரே இரவில் செல்வந்தரான சுரங்க அகழ்வாளர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Jun, 2020 | 2:24 pm

Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்க நாடான தன்ஸானியாவில் சிறியளவு சுரங்க அகழ்வாளர் ஒருவர் ஒரே இரவில் செல்வந்தராகியுள்ளார்.

15 கிலோகிராம் நிறையுடைய பெறுமதிமிக்க Tanzanite கற்கள் இரண்டை விற்ற அவருக்கு இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.

குறித்த Tanzanite கற்களுக்கு தன்ஸானிய சுரங்க பணியக அமைச்சு 3.4 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வழங்கியுள்ளது.

Tanzanite எனப்படும் நீல/ஊதா வகை கனிமம் தென் தன்ஸானியாவில் 1967 இல் கிளிமஞ்சாரோ மலைக்கு அண்மித்த நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.

Tanzanite மலிவான இரத்தினக்கல்லுக்கு மாற்றீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்