உப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

உப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

உப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2020 | 7:33 am

Colombo (News 1st) 2018ஆம் ஆண்டு முதல் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை உப்பு தனியார் நிறுவனத்திற்கு இலாபமீட்டுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று (24) மாலை ஜனாதிபதியை சந்தித்தனர்.

2017ஆம் ஆண்டிலிருந்து 2 வருடங்களுக்குள் ஏற்பட்ட நடத்திற்கான காரணத்தை கண்டறிந்து இலாபமீட்டுவது நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உட்பட பணிப்பாளர் சபையின் பொறுப்பு என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ETF நிறுவனத்தின் கீழுள்ள அந்த நிறுவனம் ஒருபோதும் நட்டமடையக்கூடாது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான திட்டங்களை வெவ்வேறாக தயாரித்து இலாபமீட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உப்பு இறக்குமதியை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நட்டமடைவதற்கான காரணங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இலாபமீட்டுவதற்கான மூலோபாயங்களே தமக்கு அவசியம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்