அமைச்சரவையிடம் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

by Staff Writer 25-06-2020 | 2:02 PM
Colombo (News 1st) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சுக்கு அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தௌிவுபடுத்தியுள்ளார். க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான உறுதியான திகதி மற்றும் பரீட்சைகளை நடாத்துவதற்கான முறைகள் தொடர்பில் கலந்தாலோசித்து அறிவிப்பை விடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியிருந்ததாகவும் விடயத்துடன் தொடர்புடைய துறைகளை சேர்ந்தவர்களுடன் விரைவில் கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கவுள்ளதாக கூறியதாக கல்வி அமைச்சர் கூறியதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். இதனையடுத்து, பிரத்தியேக வகுப்புகளுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்குள்ள வசதிகள் தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதி பரிந்துரை விடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.