சீனாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரான பொறியியலாளர் 

Google இன் முன்னாள் ஊழியர் சீனாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்

by Chandrasekaram Chandravadani 24-06-2020 | 12:38 PM
Colombo (News 1st) Google நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய செல்வந்தராக பதிவாகியுள்ளார். சீனாவில் மிகப்பெரிய செல்வந்தர்களின் வரிசையில் இரண்டாம் இடம் தற்போது பொறியியலாளர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில், Google நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான கொலின் ஹூவாங் (Colin Huang) இவ்வாறு இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்தின் பெறுமதி 45.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. Colin Huang இதற்கு முன் Microsoft நிறுவனத்திலும் 3 வருடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிநெறிகளைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும். அலிபாபா நிறுவுநர் Jack Ma க்கு பின் சீனாவின் மிகப் பெரும் செல்வந்தராக இவரது பெயர் இடம்பெறுகின்றது.