Batman பட இயக்குநர் காலமானார்

Batman பட இயக்குநர் காலமானார்

by Chandrasekaram Chandravadani 24-06-2020 | 8:00 AM
Batman திரைப்படத்தின் இயக்குநர் ஜொயெல் ஷுமேக்கர் (Joel Schumacher) தனது 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஆரம்பத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர் Incredible Shrinking Woman படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் Batman உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த பல வருடங்களாக புற்றுநோயால் பீடிக்கப்பட்டு வந்த இயக்குநர் Joel Schumacher நேற்று (23) காலமானார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.