வில்பத்து வழக்கின் தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு

வில்பத்து வழக்கின் தீர்ப்பை ஜூலை 31 ஆம் திகதி அறிவிக்க தீர்மானம்  

by Staff Writer 24-06-2020 | 12:22 PM
Colombo (News 1st) வில்பத்து காடழிப்பு தொடர்பில் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. வில்பத்து - கல்லாறு, மரிச்சுக்கட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஜனக்க டி சில்வா, நிஷ்சங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை குடியேற்றும் போர்வையில் முன்னெடுக்கப்பட்ட காடழிப்பினால், வில்பத்து இயற்கை வனத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் யானை பிரச்சினை அதிகரித்ததாகவும் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.