முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்

தேர்தல் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

by Staff Writer 24-06-2020 | 2:22 PM
Colombo (News 1st) தேர்தல்கள் முறைப்பாடுகள் தொடர்பில் முகாமைத்துவப்படுத்துவதற்கான பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலப்பகுதியில் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சட்டவிரோத பிரச்சாரங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் இந்த பிரிவில் முறைப்பாடு பதிவுசெய்ய முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தொலைபேசி, மின்னஞ்சல், வைபர், வாட்ஸ் அப், தொலைநகல் மற்றும் முகப்புத்தகத்தினூடாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகளை, 011 2 886 179 011 2 886 421 011 2 886 117 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பதிவுசெய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதேவேளை, 011 2 886 551 011 2 886 552 ஆகிய இலக்கங்களுக்கு தொலைநகல் ஊடாகவும் 071 9 160 000 என்ற இலக்கத்தினூடாக வைபர் மற்றும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளங்களினூடாகவும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. அத்தோடு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்பதுடன் Election commission of Sri Lanka என்ற முகப்புத்தகத்திலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.