உலோக ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை

உலோக ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை

by Staff Writer 24-06-2020 | 7:02 AM
Colombo (News 1st) நாட்டில் உலோக ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரும்பு, பித்தளை, அலுமினியம், செப்பு, ஈயம் உள்ளிட்ட உற்பத்தியாளர்களின் பற்றாக்குறை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மூலப் பொருட்கள் பற்றாக்குறையால் கிராமியமட்ட உற்பத்தியாளர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உலோக ஏற்றுமதி 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தேவையான உலோகங்களை உற்பத்தியாளர்கள் பல்வேறு வழிகளில் இரகசியமாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உள்நாட்டில் உலோகப் பயன்பாடு தொடர்பிலான ஆய்வினை ஆரம்பிக்குமாறு தொழில் அபிவிருத்தி சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின் பின்னர் ஏற்றுமதியைத் தடை செய்வது தொடர்பில் மேலதிக தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உலோக ஏற்றுமதியை மேற்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.