அமெரிக்க GPSஇற்கு சவால் விடுக்கும் சீனாவின் BeiDou

அமெரிக்க GPS-இற்கு சவால் விடுக்கும் சீனாவின் BeiDou

by Bella Dalima 24-06-2020 | 4:43 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்கு சொந்தமான Global Positioning System (GPS)-இற்கு பதிலாக தங்களது சொந்த தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கும் செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது. சீனா தயாரித்துள்ள BeiDou-3 Navigation அமைப்பிற்காக 35 செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டன. இதில் கடைசி செயற்கைக்கோளையும் சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. உலகளவில் Navigation தகவல்களை வழங்கும் இந்த அமைப்பிற்காக 10 மில்லியன் டொலரை சீனா செலவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றி மூலம் அமெரிக்காவிற்கு சொந்தமான GPS அமைப்பை சீனா சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கொரோனா வைரஸ் பிரச்சினை, வர்த்தகப் பிரச்சினை மற்றும் ஹாங்காங் குறித்த பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், சீனா இந்த திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது. கடந்த வாரமே இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவின் GPS, ரஷ்யாவின் குளோனாஸ், ஐரோப்பிய கலிலியோ சிஸ்டம்ஸ் (GALILIO SYSTEMS) என மூன்று வழிநடத்தல் அமைப்பு உலகில் காணப்படும் நிலையில், தற்போது சீனாவின் Beidou Navigation Satellite System (BDS) இந்த பட்டியலில் இணைந்துள்ளது.