நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு ​வேலைத்திட்டம்

நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு ​வேலைத்திட்டம்

நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு ​வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2020 | 8:06 am

Colombo (News 1st) நாளை (25) முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் வலயங்களாக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகளை அண்மித்த இடங்களில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்