by Staff Writer 24-06-2020 | 11:12 AM
Colombo (News 1st) அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் 3 உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களுக்கு பதிலாக 25 மதுபான போத்தல்களுடன் மற்றுமொருவரை சந்தேகநபராக பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக 60,000 ரூபா பணத்தை குறித்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு சார்ஜன்களுமே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.