இணை பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

இணை பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

இணை பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2020 | 1:57 pm

Colombo (News 1st) எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை பயன்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்த குறிப்பிட்டார்.

காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த நிகழ்வுகள் உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பங்குபற்றக்கூடிய உடற்பயிற்சி செயற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

இதனை தவிர விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலை நேரங்களில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்