முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா

முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா

by Staff Writer 23-06-2020 | 5:57 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் கட்டுப்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இலகுபடுத்தல் நடைமுறைகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், மக்கள் பிரதிநிதிகள் சபையில் அறிவித்துள்ளார். இதற்கமைய, 2 மீட்டர் சமூக இடைவௌி ஒரு மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுபான நிலையங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் திறக்கப்படவுள்ளன. இதனிடையே, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமானது முதல் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.