கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் ஊடக நடைமுறையின் தேவை தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

by Staff Writer 23-06-2020 | 7:33 PM
Colombo (News 1st) வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஔிபரப்புவதற்காக தேர்ந்தெடுக்கும் போது முறையான நடைமுறையினை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பூர்வீக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் முறையான ஊடக நடைமுறையின் தேவை தொடர்பில் ஜனாதிபதி இதன் போது கவனம் செலுத்தியிருந்தார். தமது கொள்கைகளை சுட்டிக்காட்டுவதை விடுத்து, தமது அரசாங்கம் முன்னெடுத்து வரும், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள விழுமியங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே முக்கியமானது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.