வௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை நீடிப்பு

அமெரிக்காவில் வௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை மேலும் நீடிப்பு

by Chandrasekaram Chandravadani 23-06-2020 | 11:50 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் Green Card விநியோகம் மற்றும் வௌிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவ் வருடத்தின் இறுதி வரை, தடை காலம் நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் உயர்மட்ட தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தொற்றினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அமெரிக்க பிரஜைகள் இதன்மூலம் நன்மையடைவார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வைரஸ் தொற்றை காரணமாக வைத்து தமது குடியுரிமை சட்டத்தை பலப்படுத்துவதற்கு வௌ்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.