முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா

முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா

முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2020 | 5:57 pm

Colombo (News 1st) பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் கட்டுப்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இலகுபடுத்தல் நடைமுறைகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், மக்கள் பிரதிநிதிகள் சபையில் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 2 மீட்டர் சமூக இடைவௌி ஒரு மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதுபான நிலையங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் திறக்கப்படவுள்ளன.

இதனிடையே, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமானது முதல் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்