நிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டவர்கள் நால்வர் கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டவர்கள் நால்வர் கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டவர்கள் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2020 | 1:31 pm

Colombo (News 1st) இணையத்தளத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வௌிநாட்டு பிரஜைகள் நால்வர் கல்கிசையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பிரஜைகள் மூவரும் உகண்டா நாட்டு பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வங்கி கடனட்டைகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்