இவ் வருடத்திற்குள் 2800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள்

by Fazlullah Mubarak 22-06-2020 | 9:01 AM

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில், எலிக்காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறையேனும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.