​தேசிய அடையாள அட்டை விநியோகம் – ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

​தேசிய அடையாள அட்டை விநியோகம் – ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

​தேசிய அடையாள அட்டை விநியோகம் – ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

22 Jun, 2020 | 8:51 am

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் நாளாந்தம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.

காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதற்கிணங்க தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

10 அலுவலக நாட்களுக்குள் வருகைதர உசிதமான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கம் ஒன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன்பின்னர் அந்த தினத்தில் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்