by Fazlullah Mubarak 22-06-2020 | 9:18 AM
தொழில் நிமித்தம் வௌிநாடு சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7,000 தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
கொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெருமளவானோர் நாடு திரும்பினர்.
ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பி கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் தொழிலுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் பணியாளர்கள், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.