மஹிந்தானந்தவுடன் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை 

மஹிந்தானந்தவுடன் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை 

மஹிந்தானந்தவுடன் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை 

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2020 | 8:21 pm

COLOMBO (NEWS 1ST) 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை, Sports 1st க்கு இன்று (22) தெரிவித்தது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் Sports 1st சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இன்று வினவியது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் கலந்துரையாடவுள்ளதாக பேரவையின் உயரதிகாரி ஒருவர் Sports 1st க்கு பதிலளித்தார்.

விசாரணை செய்யும் அளவிற்கு தவறு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்