பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர்கள் சிலர் ஹங்வெல்லவில் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர்கள் சிலர் ஹங்வெல்லவில் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர்கள் சிலர் ஹங்வெல்லவில் கைது

எழுத்தாளர் Fazlullah Mubarak

22 Jun, 2020 | 12:35 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் உள்ளிட்ட மூவர் ஹங்வெல்லவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘இந்து’ என்றழைக்கப்படும் இந்துனில் குமார என்ற பாதாள உலகக் குழுவின் உறுப்பினரின் உதவியாளரான ‘அக்கு’ என்றழைக்கப்படும் புத்திக ஜயதிலக்க உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கூரான ஆயுதங்கள் நான்கும் போலித் துப்பாக்கிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்