சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தமை குறித்த வழக்கில் நால்வர் விடுதலை 

சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தமை குறித்த வழக்கில் நால்வர் விடுதலை 

சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தமை குறித்த வழக்கில் நால்வர் விடுதலை 

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2020 | 7:03 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக 5 யானைகளை வைத்திருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 பிரதிவாதிகள் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தால் பிரதிவாதிகள் இன்று (22) விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் எழுதுவினைஞர் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளே இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந் நால்வருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இன்மையால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக அலி ரொஷான் என்றழைக்கபடும் நிரோஜ் ரொசான் உள்ளிட்ட​ நால்வருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்