சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை 

by Staff Writer 21-06-2020 | 11:32 AM
Colombo (News 1st) சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை (22) நள்ளிரவு வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பிலும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஏனைய ஆலோசனைகளும் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார். நாளை நள்ளிரவு வௌியாகவுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் COVID-19 தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமூக இடைவௌியை பேணுவதுடன், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். சமூக இடைவௌியை பேணுவதுடன், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் எனவும் எதிர்வரும் காலங்களிலும் கைகளை கழுவி தூய்மையாக இருத்தல் அவசியம் எனவும் சமூகத்தில் தற்போது வைரஸ் தொற்று இல்லாத போதிலும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரிடமிருந்து வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எவ்வாறாயினும் எதிர்வரும் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுவது அவசியமாகும் எனவும் அவ்வாறில்லாத பட்சத்தில் COVID-19 வைரஸ் தொற்று மீண்டும் பரவும் அபாயமுள்ளதாகவும் கூறினார். அத்துடன், நேற்றைய தினம் (20) எந்தவொரு கொரோனா நோயாளரும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 1,000 கடற்படை உறுப்பினர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.